2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

திருச்சியில் இலங்கை தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

Freelancer   / 2022 ஜூன் 26 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருச்சி அரச வைத்தியசாலையில் இலங்கை தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

தமிழகம் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள  சிறப்பு முகாமில், தமது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற 30 இலங்கைத் தமிழர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  
சிறப்பு முகாமில் உள்ள 30 இலங்கை தமிழர்கள், மாத்திரை உற்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தமிழக ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து, குறித்த 30 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக குறித்த வைத்தியசாலைக்குள் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .