Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஒக்டோபர் 23 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளைக்கு தீபாவளி என்பதால், அனைவரும் சொந்த ஊர்களுக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், மத்தியப் பிரதேசம் ரேவா மாவட்டத்தில் சுஹாகி பஹரி பகுதியருகே சென்று கொண்டிருந்த பேருந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதியதில் விபத்துக்குள்ளாகியது. இதில் நிகழ்விடத்திலேயே 12 பேர் நிலையில் மொத்தமாக 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் விபத்தில் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஐதராபாத்திலிருந்து உத்தரப் பிரதேசம் மாநிலம் கோராக்பூருக்கு பேருந்து சென்றுகொண்டிருந்தது. இதில், தீபாவளி கொண்டாட்டத்திற்காக அனைவரும் சொந்த ஊர் சென்றுள்ளனர்.
இந்த பேருந்து மத்தியப் பிரதேச மாநிலம் சுஹாகி பஹரி அருகே சென்ற போது, முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி திடீரென பிரேக் போட்டதால், அதன் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 12 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த 35 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1 hours ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
4 hours ago