2025 ஒக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை

தீபாவளியன்று போதைப் பொருளுடன் இருவர் கைது

Freelancer   / 2025 ஒக்டோபர் 21 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட புற நகர் பகுதியில் ஐஸ்  போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த இரு  சந்தேக நபர்கலை தீபாவளித் தினமான நேற்று (20) சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைது செய்தனர்.

இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே இரு சந்தேக நபர்களும்  கைது செய்யப்பட்டனர்.

கைதான சந்தேக நபர்கள் 25 வயது  மற்றும் 22 வயதுடையவர்கள் என்பதுடன்   சம்மாந்துறை  மலையடிக்கிராமம் 3  பகுதியைச்  சேர்ந்தவர்களாவர்.

அவர்களிடம்  இருந்து 1370 மில்லிகிராம், 385 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன்  ஒரு தொகை பணம், மூன்று கையடக்கத் தொலைபேசிகள், மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டன.  (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .