2026 மே 01, வெள்ளிக்கிழமை

துப்பாக்கிச்சூடு: பொலிஸ் அதிகாரி உள்பட 10 பேர் பலி

J.A. George   / 2021 மார்ச் 23 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பவுல்டர் பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் அங்கு நுழைந்து திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்தபடி ஓடினர்.

தகவலறிந்து அங்கு பொலிஸார் விரைந்து வந்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் பொலிஸ் அதிகாரி உள்பட 10 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய மர்ம நபர் பொலிஸாரிடம் சிக்கினார். தொடர்ந்து அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .