J.A. George / 2022 ஒக்டோபர் 06 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள், பெண்கள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டனர்.
தாய்லாந்தின் வடக்கு மாகாணத்தில் ஒரு பகல் நேர குழந்தைகள் நல காப்பகம் செயல்பட்டு வருகிறது. அதில் ஏராளமான குழந்தைகளும், பெற்றோர்களும், காப்பக ஊழியர்களும் இருந்தனர்.
அப்போது காப்பகத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார். இதனை கண்ட குழந்தைகளும், பெற்றோர்களும் அலறியடித்துக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடினர்.
இந்த கோரத் தாக்குதலில் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரித்து இருக்கிறது. இதில் 22 பேர் குழந்தைகள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கடைசியில் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்தார். துப்பாக்கிச்சூடு நடத்திவர் குறித்து விசாரித்தபோது அவர் முன்னாள் பொலிஸ் அதிகாரி என்பது தெரியவந்துள்ளது.
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago