2026 மே 02, சனிக்கிழமை

துமிந்தவுக்கு பொதுமன்னிப்பு

R.Maheshwary   / 2021 மார்ச் 22 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரண தண்டனைக் கைதியான துமிந்த சில்வாவுக்கு, பொதுமன்னிப்பு வழங்கப்படவேண்டுமென மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில், கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த கிராமிய, பிரதேச குடிநீர் வழங்கள் கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, 'அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே துமிந்த சில்வாவுக்கு  மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நல்லாட்சியில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும் என்றார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டமை குறித்து பாரிய சந்தேகம் காணப்படுகின்றன. தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னரே அத்தீர்ப்பு தொடர்பில் அரசியல்வாதிகள் கலந்துரையாடியுள்ளமை தெரியவந்துள்ளது என்றார். 

 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு, ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதியிடம் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர். அரசியல் காரணிகளையும் தனிப்பட்ட பழிவாங்கல்களையும் அடிப்படையாகக் கொண்டே மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் காணப்படுகிறது. துமிந்தவுக்கான தீர்ப்பை மீள்பரிசீலனை செய்யுமாறும்  கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .