Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 22 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.கமல், (படப்பிடிப்பு: ஆகீல் அஹமத்)
நாட்டுக்குள், போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்திய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, போதைப்பொருள் பயன்பாட்டாளர்களைத் தூக்கிலிடுவதால், போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த முடியாதென்பதால், அந்தத் தர்க்கத்தைத் தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கூறினார்.
குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்களைக் காப்பாற்ற, மக்கள் பிரதிநிதிகள் முன்வருவதை ஏற்க முடியாதெனவும் அது, போதைப்பொருள் பிரச்சினையை விடவும் முக்கியமான பிரச்சினை என்றும் சுட்டிக்காட்டிய தவிசாளர், குற்றம் செய்பவர்களைக் காப்பாற்ற, மக்கள் பிரதிநிதிகள் முன்வருவதாலேயே, இந்த பிரச்சினை மேலும் வலுவடைகின்றதென்றும் கூறினார்.
காலியில் நேற்று (21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், போதைப்பொருள் பாவனை என்பது, இலங்கைச் சட்டத்துக்கு முரணானது என்றால், எவருமே போதைப்பொருள் பயன்பாட்டில் ஈடுபட முடியாதென்றும் இரவில் அருந்திவிட்டு காலையில் வரலாமென்பதால், போதைப்பொருள் பிரச்சினை இலங்கையின் முக்கிய பிரச்சினை அல்லவென்றும் தெரிவித்தார்.
இவ்வாறு தான் கூறுவதால், போதைப்பொருள் பாவனையாளர்களுக்குச் சாதகமாகப் பேசுவதாக அர்த்தப்படாதெனவும் கூறினார்.
இதேவேளை, அரசாங்க தகவல் திணைக்களத்தில், நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டிருந்த தேசப்பிரியவிடம், மாகாண சபைத் தேர்தல் பற்றிய அவரது நிலைப்பாடு என்வென்றும் தேர்தலைக் கோரி நீதிமன்றத்தை நாடவில்லையா எனவும், குறுத்திரைப்படத் தயாரிப்பில் காட்டும் அக்கறையை தேர்தலில் காட்டலாமல்லவா என்றும், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தபோது, தேர்தல்களைப் பற்றி தற்போது கேட்க வேண்டாம் என்றும் அதற்கு பதிலளிப்பதற்கான தருணம் இதுவல்லவென்றும், அக்கேள்விகளைப் புறக்கணித்தாரென்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago