Janu / 2024 நவம்பர் 18 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயணித்துக்கொண்டிருந்த இ.போ.சபைக்குச் சொந்தமான பேருந்தின் மிதி பலகையில் இருந்த இருவர் தூக்கி வீசப்பட்டு விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (18) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பதுளை பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை டிப்போவுக்கு சொந்தமான பேருந்து, பாணந்துறையில் இருந்து கண்டி நோக்கி கொஸ்வத்தை பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, பேருந்தின் பின் பகுதி மிதி பலகையில் இருந்த நடத்துனர் மற்றும் பயணி தூக்கி வீசப்பட்டு விழுந்துள்ளனர்.
விபத்தில் இருவரும் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நடத்துனர் கிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .