2025 ஜூலை 05, சனிக்கிழமை

தூக்குக் கயிற்றை வெளிநாட்டிலிருந்து கொண்டு வர நடவடிக்கை

Editorial   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரணத் தண்டனையை நிறைவேற்றுவதற்குத் தேவையான கயிற்றை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு ஊடாக கொண்டு வருவதற்குத்  நீதி அமைச்சு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்காக  வெளிநாட்டலுவல்கள்  அமைச்சுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த கயிற்றை கொள்வனவு செய்வதற்காக, தற்போது தூக்குத் தண்டனையை நிறைவேற்றும்  பாகிஸ்தான், பங்களாதேஸ், இந்தியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஒரு நா​ட்டைத்    தெரிவு செய்யுமாறும் குறித்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதெனத் தெரிவிக்கப்படுகின்றது.

மரணத் தண்டனையை நிறைவேற்றுவதற்காக சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் காணப்படும் கயிறானது 12 வருடங்களுக்கு முன்பு  பாகிஸ்தானிடமிருந்து நன்கொடையாகக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .