2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

தென்னகோனை நீக்கும் கடிதத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

Simrith   / 2025 ஓகஸ்ட் 06 , பி.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் (ஐ.ஜி.பி) பதவியில் இருந்து நீக்கும் கடிதத்திற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஒப்புதல் அளித்துள்ளார். 

தேசபந்து தென்னகோன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இந்தக் கடிதத்தை சமர்ப்பித்தார்.

அரசியலமைப்பு சபையிடம் ஐஜிபி பதவிக்கு ஒரு வேட்பாளரை ஜனாதிபதி பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, பெரும்பான்மை ஒப்புதலின் அடிப்படையில் புதிய இன்ஸ்பெக்டர் ஜெனரல் நியமிக்கப்படுவார்.

தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்கும் முன்மொழிவு மீது நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், தீர்மானத்திற்கு ஆதரவாக 177 வாக்குகள் அளிக்கப்பட்டன, எதிராக எதுவும் அளிக்கப்படவில்லை. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வாக்களிப்பில் இருந்து விலகி இருந்தார்.

ஜூலை 22 ஆம் திகதி, தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றவாளி என பாராளுமன்றத்தில் தெரியவந்தது. 

தென்னக்கோனை விசாரித்த பாராளுமன்றக் குழுவின் அறிக்கையை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சமர்ப்பித்தபோது இதை அறிவித்தார்.

அதன்படி, தேசபந்து தென்னகோனை அவரது பதவியில் இருந்து நீக்க குழு ஒருமனதாக பரிந்துரைத்தது. தென்னகோன் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பதவியில் தவறான நடத்தை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .