Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2025 ஜூன் 25 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோனால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழு முன்னிலையில் பிரதிவாதியான பொலிஸ்மா அதிபரின் சாட்சியாளர்கள் பட்டியலில் இருந்த அனைத்து சாட்சியாளர்களும் புதன்கிழமை (25) சாட்சியங்களை வழங்கி முடித்தனர்.
பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட அவரது சாட்சியாளர்கள் பட்டியலில் 15 சாட்சியாளர்கள் சாட்சியங்களை வழங்கவிருப்பதாக பொலிஸ்மா அதிபரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆர்.எஸ்.வீரவிக்ரம முன்னர் கூறியிருந்தபோதும், புதன்கிழமை (25) மேலும் இருவர் சாட்சியளித்தனர்.
ஏனைய சாட்சியாளர்கள் விசாரணைக் குழு முன்னிலையில் சாட்சியளிக்க மாட்டார்கள் என அவர் அறிவித்தார். இதனால், இந்த சாட்சியாளர்கள் விசாரணைக் குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தபோதும் அவர்களை விடைபெற்றுச் செல்லுமாறு உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன தலைமையிலான நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஈ.டபிள்யூ.எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் அடங்கிய விசாரணைக் குழு அறிவுறுத்தியது.
இந்த நிலையில் பிரதிவாதியான பொலிஸ்மா அதிபரின் சாட்சியாளர் பட்டியலில் இருந்து 7 சாட்சியாளர்களே சாட்சியங்களைப் பெற்றுக்கொண்டு பிரதிவாதியின் வழக்கு புதன்கிழமை (25) உடன் முடிவுக்கு வந்தது.
உத்தியோகபூர்வ பணிக்காக வெளிநாடு சென்றுள்ள முறைப்பாட்டாளரின் சாட்சியாளர்கள் இருவரிடமிருந்து ஜூன் 26ஆம் திகதிக்குப் பின்னர் சாட்சிகளைப் பெற்றுக்கொள்ள சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விசாரணைக் குழுவில் கலந்துகொண்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரஜித பெரேரா மற்றும் பொலிஸ்மா அதிபரின் தரப்பினர் இணங்கிக் கொண்டதற்கு அமைய ஜூலை 01 திகதி மு.ப 9.30 மணிக்கு இந்த சாட்சியாளர்களிடமிருந்து சாட்சியங்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.
இதன் பின்னர், இரு தரப்பின் எழுத்துமூல சமர்ப்பிப்புக்களையும் ஜூலை மாதம் 8ஆம் திகதி பி.ப 3.30 மணிக்கு முன்னர் குழு முன்னிலையில் சமர்ப்பிப்பதற்கும் சட்டமாஅதிபரின் பிரதிநிதிகளும், பிரதிவாதியின் தரப்பினரும் இணங்கியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
19 minute ago
45 minute ago
58 minute ago