Editorial / 2020 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
19 பேர் அடங்கிய தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நேற்றிரவு (10) வெளியிடப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இலங்கை தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு கிடைத்த தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கை தமிழரசு கட்சி சார்பில் தவராசா கலையரசன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, எங்கள் மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் இதுவரை தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை வழங்கவில்லை.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் 17 தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
அலி சப்ரி
மொஹமட் முஸம்மில்
மர்ஜான் பளீல்
சுரேன் ராகவன்
ஜீ.எல். பீரிஸ்
சாகர காரியவசம்
ஜித் நிவார்ட் கப்ரால்
ஜயந்த வீரசிங்க
மஞ்சுள திஸாநாயக்க
ரஞ்சித் பண்டார
சரித ஹேரத்
கெவிந்து குமாரதுங்க
திஸ்ஸ விதாரண
யாதமுனி குணவர்தன
டிரான் அலஸ்
சீதா அரம்பேபொல
ஜயந்த கெட்டகொட
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago