2026 மே 09, சனிக்கிழமை

dd

தேசியப் பட்டியல்; இன்று இறுதி

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 08 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எமது மக்கள் சக்திக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு யாரை நியமிப்பது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளும் இறுதிக் கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளதாக எமது மக்கள் சக்தியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் சமன் பெரேரா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் மற்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோர் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கடந்த வெள்ளிக்கிழமை  நடைபெற்றதாகவும் ஆக்கபூர்வமான முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில்,இன்று மீண்டும் கூட்டம் கூடுவதாகவும் தலைவர் சமன் பெரேரா தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .