2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

தேசிய வங்கிக்கட்டமைப்பு அபாயத்துக்கு உள்ளாகலாம்

Freelancer   / 2022 ஜூலை 29 , மு.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள  காரணத்தினால்  இலங்கையின் தேசிய நிதிக்  கடன் பாரிய அபாயத்திற்கு உள்ளாகலாம் என பிட்ச் தரப்படுத்தல்  மதிப்பீட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்த நகர்வினால் வங்கி மூலதனம் பாதிக்கப்படுவதுடன், அவர்களை பிணை எடுப்பதற்காக அரசாங்கம் அதிக கடனில் சிக்க வைக்கும் எனவும் தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கத்திற்கு ராஜபக்‌ஷ குடும்பத்துடன் உள்ள தொடர்புகள் காரணமாக இலங்கை அரசியல் ஆபத்தினை எதிர்கொள்கின்றது எனவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. 

தேசிய நாணயக் கடனைத் திருப்பிச் செலுத்தாதது தேசிய வங்கிகளின் மூலதன நிலைகளை வீழ்த்தக்கூடும், இது வங்கித் துறையில் அரசாங்க மூலதன உட்செலுத்தலுக்கு வழிவகுக்கும் என  மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பங்கு மற்றும் வட்டிச் செலவுகள் அதிகமாக இருப்பதால், தேசிய  நாணயக் கடன்  மறுசீரமைப்பில் சேர்க்கப்படும் அபாயத்தை 'CCC' மதிப்பீடு பிரதிபலிக்கிறது. மேலும் அதைத் தவிர்ப்பது வெளிநாட்டு நாணயக் கடனை வைத்திருப்பவர்களின் மறுசீரமைப்புச் சுமையை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. 

புதிய அரசாங்கத்திற்கு ராஜபக்‌ஷ குடும்பத்துடன் உள்ள தொடர்புகள் காரணமாக இலங்கை அரசியல் ஆபத்தினை எதிர்கொள்கின்றது எனவும்  பிட்ச் தரப்படுத்தல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 

இலங்கை நிதி நெருக்கடி மற்றும் வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதில்  அரசியல் நெருக்கடிகளையும்  எதிர்கொள்கின்றது என தெரிவித்துள்ள பிட்ச் தரப்படுத்தல் முகவர் அமைப்பு வலுவான பாராளுமன்ற பெரும்பான்மையுடன்  புதிய அரசாங்கம் ஆட்சிபொறுப்பை ஏற்றுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

ராஜபக்‌ஷ குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் அகற்றப்பட்டனர் ஆனால் அரசாங்கத்துடன் ராஜபக்‌ஷ தொடர்புள்ளதால் இந்த நிர்வாகத்திற்கு மக்கள் ஆதரவு இல்லாத நிலை காணப்படுகின்றது. அரசாங்கத்திற்கு பாராளுமன்ற ஆதரவு வலுவானதாக காணப்படுகின்றது. ஆனால் மக்கள்ஆதரவு மிகவும் பலவீனமானதாக உள்ளது எனவும் பிட்ச் தரப்படுத்தல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X