Editorial / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலராக கடமையாற்றும் காலி மாவட்ட செயலாளருக்கு இடமாற்றம் பெற்றுக்கொடுக்கும் அமைச்சரவை பத்திரமொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா, இன்று (18) தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளரிடமும் அது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நவடிக்கையானது ஜனநாயக விரோத நடவடிக்கையாகும் என்பதால் அதற்கு இடமளிக்க கூடாது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளரிடம் தான் கோரிக்கை விடுப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலலை ஒத்திவைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழு்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
12 minute ago
1 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
20 Apr 2026