2025 மே 09, வெள்ளிக்கிழமை

தேர்தல்களில் ‘கை’ சின்னத்தில் சு.க. குதிக்கும்

Editorial   / 2025 ஜனவரி 02 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் உட்பட எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ‘கதிரை’ சின்னத்தில் போட்டியிடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க  தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருக்கும் எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கைகோர்க்குமாறு இடதுசாரி குழுக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் புத்தாண்டுக்கான பணிகளை ஆரம்பித்த பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பல்வேறு முரண்பாடுகளை சுமுகமாக தீர்த்து கட்சியை பலப்படுத்தும் வகையில் புதிய பயணத்தை புத்தாண்டில் ஆரம்பிக்கவுள்ளதாக கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், பல்வேறு காரணங்களால் அரசியலில் இருந்து விலகிய அல்லது வேறு கட்சிகளில் இணைந்துள்ள அனைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரையும் இந்த முயற்சியில் கட்சியுடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுப்பதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X