Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Freelancer / 2021 ஓகஸ்ட் 08 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியோர், நோயாளி அடையாளம் காணப்பட்டு 3-5 நாட்களுக்குள் தங்களைப் பரிசோதிக்க வேண்டும் என, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று மருத்துவப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர். சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
நோயாளி அடையாளம் காணப்பட்டு 5-7 நாட்களுக்குள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என முன்னர் பரிந்துரைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அறிகுறிகள் தென்படும் நோயாளிகளுக்கு விரைவான அன்டிஜென் பரிசோதனைகள் ஏற்றதாக இருக்கும் என்றும், அறிகுறியற்ற நோயாளிகளுக்கு பிசிஆர் பரிசோதனை மிகவும் உணர்திறன் உடையதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.
இது தனது தனிப்பட்ட கருத்து என்றும் உள்ளூர் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகாட்டுதல்கள் அல்ல என்றும் அவர் அதில் சுட்டிக்காட்டியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago