2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

திக்குமுக்காடினார் ஜீ.எல் பீரிஸ்

George   / 2016 நவம்பர் 04 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

“புதிய கட்சியொன்றின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ள முன்னர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிவிட்டீர்களா?” என்று, கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீ.எல்.பீரிஸிடம், ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வியால், அவர் சில நிமிடங்கள் திக்குமுக்காடிப்போனார்.  

கொழும்பு, புஞ்சிபொரளையில் அமைந்துள்ள ஸ்ரீ வஜிராம பௌத்த மத்தியஸ்தானத்தில் நேற்று இடம்பெற்ற, ஒன்றிணைந்த எதிரணியின் பொருளாதார ஆராய்ச்சிப் பிரிவினது செய்தியாளர் மாநாட்டின் போதே, இச்சம்பவம் இடம்பெற்றது.   

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகாத நிலையில், புதிய கட்சியொன்றின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். இந்நிலையில், உங்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட இடமிருக்கிறதே?” என்று, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பீரிஸ், அது குறித்து தனக்குப் பிரச்சினையில்லை எனத் தெரிவித்தார்.   

இது குறித்து, தான் அலட்டிக்கொள்ளப்போவதில்லை என்றும் கூறிய ஜீ.எல்.பீரிஸ், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை, தனக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் எடுத்துக்கொள்ளட்டும் என, மேலும் கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .