2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தொடர்ந்து மழை பெய்யும்: மக்களுக்கு எச்சரிக்கை

Gavitha   / 2015 நவம்பர் 15 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15), 150 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, மன்னார்-யாழ்ப்பாணம் வீதி, புத்தளம்-மன்னார் பழைய வீதி, செட்டிகுளம்-வவுனியா வீதி ஆகியவை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

மேலும், கிழக்கு, வடமேற்கு மற்றும் வடக்கு ஆகிய கடல் பகுதிகளுக்கு, மீனவர்களோ கடற்படையினரோ செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் ஏனைய பிரதேசங்களில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X