2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் 'சு.க.வுக்கு தோல்வியில்லை'

Kogilavani   / 2016 டிசெம்பர் 30 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவிதா சுப்ரமணியம், வி.யுகாந்தினி

2017ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அனைத்துத் தேர்தல்களிலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியே வெற்றிபெறும் என்றும் அதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும், அக்கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் எம்.எச்.எம்.மன்சூர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

“மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று, எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதியுடன் 2 வருடம் கழிந்துவிட்டது. பிறக்கவுள்ள 2017ஆம் ஆண்டு, வெற்றிகரமான ஆண்டாக இருக்க வேண்டும் என்பதே, இந்த ஆண்டின் இரண்டாம் வருட பூர்த்தியின் எண்ணமாகவுள்ளது.

அதாவது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றியாகவே இது கருதப்படுகின்றது. கடந்த இரண்டு வருடங்களாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சிக்கும் நாட்டுக்கும் பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டிருந்ததன் காரணத்தினால், சு.க வெற்றிகரமான பாதையை நோக்கிச் செல்லும் ஒரு பலம் வாய்ந்த கட்சியாக இருக்கின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், சு.க வின் அமைப்பாளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதன்போது, விரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வரவுள்ளதாகவும் எனவே அனைத்து அமைப்பாளர்களும் அதற்கு தங்களைத் தயார்படுத்திக்கொள்ளுமாறும், ஜனாதிபதி தெரிவித்தார்.

சு.க ஒரு பலமிக்க அரசியல் கட்சியாக இருப்பது ஒருபுறமிருக்க, அமைச்சர் பதவியொன்றை பெறவிரும்பும் வேறு கட்சிகளில் உள்ளவர்கள், ஒழிந்துக்கொண்டு, எப்படியாவது அமைச்சர் பதவியொன்றை பெற்றுக்கொள்ளவே முயற்சிக்கின்றனர். இனவாதம் பற்றி பேசி, இனவாதத்தை தூண்டி, இனவாதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தே, ஏதாவது ஒரு பதவியையேனும் வகித்துக்கொள்வதற்கு முயற்சிக்கின்றனர். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சியாயினும், இனமாயினும், உலகத்திலுள்ள அனைத்து நாடுகளாயினும் அனைத்துக்கும் சம உரிமையை வழங்கி, இலங்கை ஒரு சக்தி மிக்க நாடாக உருவாக்கியுள்ளார்.

கட்சியை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல முடியாமல், கட்சியை விற்பனை செய்து விட்டு, வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றோரே, நாட்டு மக்களுக்காக எதையும் செய்வோம் என்று கூறுகின்றனர். எனவே, யார் என்ன கூறினாலும், எதிர்வரும் வருடம் நடைபெறவுள்ள எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியே, உயர்மட்டத்திலிருந்து வெற்றிபெரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை' என்று இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .