2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி

George   / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த ஜெயலலிதாவுக்கு, திரையுலகத்தினரும் பலரும் அஞ்சலி செலுத்தினர். ரஜினி, தனுஷ், விஜய், பிரபு, விக்ரம் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர், சரத்குமார், பாக்யராஜ், பூர்ணிமா, சாந்தனு, மன்சூர் அலிகான், இசையமைப்பாளர் இளையராஜா, நாசர், பொன்வண்ணன், கார்த்தி, சத்யராஜ், சிபிராஜ், குட்டி பத்மினி, ராஜேஷ், நந்தா, கோவை சரளா, வை.ஜி மகேந்திரன் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இதேவேளை, ஸ்ரீமன், அஜய் ரத்னம், ராஜா, கௌதமி, விஜய் சேதுபதி, பவர்ஸ்டார் சீனிவாசன், எஸ்.ஏ.சந்திரசேகர், குஷ்பு, சுந்தர்.சி, ஆர்.சுந்தர்ராஜன், நெப்போலியன், ஆர்த்தி, கணேஷ், நிழல்கள் ரவி, ஸ்ரீகாந்த் தேவா, தாணு, விஜயகுமார், ஸ்ரீரி, ப்ரீத்தா ஹரி, பாண்டியராஜன், பிருத்வி, மோகன், பிரபுதேவா, பார்த்திபன், விஷால், பெப்சி விஜயன், ரமேஷ் கண்ணா, ஜெயபிரகாஷ், விக்ரமன், மாஸ்டர் மகேந்திரன், புஷ்பவனம் குப்புசாமி, செந்தில், பொன்னம்பலம், விந்தியா உள்ளிட்ட பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த ஜெயலலிதா உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி லதா, மருமகன் நடிகர் தனுஷ் மற்றும் மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா ஆகியோருடன் முற்பகல் 11.35 மணிக்கு ராஜாஜி அரங்குக்கு வந்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உடலுக்கு ரஜினிகாந்த் உள்பட குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

அப்போது, அங்கிருந்த சசிகலா, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ரஜினிகாந்த், தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார்.

- See more at: http://www.tamilmirror.lk/187499#sthash.ZzSj0IAR.dpuf

  Comments - 0

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .