Freelancer / 2026 மார்ச் 27 , மு.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (26) முற்பகல் கூடியது.
தற்போதைய உலகளாவிய வலுசக்தி நெருக்கடிக்கு மத்தியில் இந்நாட்டின் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், அவர்களுக்குத் தடையின்றி எரிபொருளை வழங்குவது மற்றும் தொழில்துறையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஆதரவை வழங்கும் திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை, ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்கின்ற இடங்களை முறையாகப் பராமரித்தல் மற்றும் போர்ச் சூழல் இல்லாத நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைப்பதற்கான திட்டங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பேர வாவியை சுத்தம் செய்யும் பணிகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.(a)

35 minute ago
49 minute ago
4 hours ago
26 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
49 minute ago
4 hours ago
26 Mar 2026