2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

நடிகை சனோஜாவின் ரூ.3.5 மில். பெறுமதியான நகைகள் கொள்ளை

Thipaan   / 2015 நவம்பர் 30 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

திரைப்பட மற்றும் நாடக நடிகையான சனோஜா பிபிலியின் 35 இலட்ச ரூபாய் பெறுமதியான தங்க நகைகள், ஞாயிற்றுக்கிழமை(29) மாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

பொரலஸ்கமுவயிலுள்ள மலர்ச்சாலையொன்றுக்கருகில் தனது காரை நிறுத்திவிட்டு சென்றபோதே அவரின் காரிலிருந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

கார்க் கண்ணாடியை உடைத்த கொள்ளையர்கள், 30,000 ரூபாய் பெறுமதியான அலைபேசி, 32,000 ரூபாய் பணம்  மற்றும் 35 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகள் என்பவற்றைக் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸில் முறையிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .