2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

Editorial   / 2025 செப்டெம்பர் 23 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் (UNGA) கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்குப் புறப்பட்டதைத் தொடர்ந்து, முக்கிய அமைச்சுகளுக்கு  பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி திசாநாயக்க துபாய் செல்லும் விமானத்தில் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்துடன். நாட்டை விட்டு திங்கட்கிழமை (22) மாலை வெளியேறினார்,

தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான டாக்டர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான பதில் அமைச்சராக.

டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பதில் அமைச்சராக எரங்க வீரரத்ன.

பாதுகாப்புக்கான பதில் அமைச்சராக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர.

வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாக்கான பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளனர்..

ஜனாதிபதி அமெரிக்காவிலிருந்து திரும்பும் வரை தற்காலிக நியமனங்கள் நடைமுறையில் இருக்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .