A.Kanagaraj / 2020 ஒக்டோபர் 25 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
நன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா வைரஸ் பரவாது என விஞ்ஞானபூர்வமான ஆதாரத்தை சுகாதார அமைச்சு வலியுறுத்த விரும்புகிறது என சுகாதார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் (பதில்) விசேட வைத்திய நிபுணர் சதாசிவம் சிறீதரனின் கையொப்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கோட்பாட்டு அடிப்படையில் எந்தவொரு மேற்பரப்பிலும் கொரோனா வைரஸ் காணப்படலாம் என்பதால், சமைப்பதற்கு மீனைத் தயாரிக்கும் போது அல்லது மீனைச் சேமித்து வைக்கும்போது முகத்தை கைகளால் தொடுவதை தவிர்ப்பதுடன் சமையல் பாத்திரங்கள் மற்றும் கரங்களை நன்கு கழுவிக்கொள்ளுதல் வேண்டும்.
மேலும் அடிப்படையற்ற விதத்தில் மீன் சந்தைகளை மூடுவது அநாவசியமாகும். ஆகையால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் கைகளை சவர்க்காரமிட்டு நன்கு கழுவுதல் ஆகியவற்றை இறுக்கமாகப் பின்பற்றி மீன் சந்தைகளை தொடர்ந்தும் நடத்தலாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .