2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆராய தெரிவுக்குழுவை அமைக்கவும்

Thipaan   / 2015 டிசெம்பர் 15 , பி.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையின் உண்மைத் தன்மையை ஆராய்வதற்காக, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிநின்றார்.

நாடாளுமன்றத்தில் வைத்தே அவர், இந்தக் கோரிக்கையை நேற்று செவ்வாய்க்கிழமை விடுத்தார்.

 நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களின் உண்மைத்தன்மை தொடர்பில் ஆராய்ந்து, ஒருமாதக் காலத்துக்குள் அறிக்கையிடுமாறு அந்தக்குழுவுக்கு பணிக்குமாறு பிரதமர், இதன்போது ஆலோசனை வழங்கினார்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில், கல்வித்துறையில் பாகுபாடு காட்டப்பட்டமை தொடர்பில் உறுதிப்படுத்தப்படுமாயின், முன்னாள் கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எம். பியுமான மஹிந்த ராஜபக்ஷவும் தங்களுடைய எம்.பி. பதவிகளைத் துறப்பதற்குத் தயாரா என்றும் பிரதமர் வினவினார்.

நிதியமைச்சருக்கு எதிராகக் கூட்டு எதிர்க்கட்சியினால் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிப்பதற்குத் திகதி குறிக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தபோதே பிரதமர் மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கினார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X