2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா இன்று

Freelancer   / 2025 ஓகஸ்ட் 21 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா கடந்த மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இதில், இன்று வியாழக்கிழமை தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது. காலை 6  மணிக்குக் காலசாந்தி பூஜையும் , 6.15 மணிக்கு வசந்த மண்டபப் பூஜையும் நடைபெற்று சுவாமி உள்வீதி வலம் வந்து, 7 மணியளவில் தேரில் எழுந்தருளுவார்.

நாளை வெள்ளிக்கிழமை தீர்த்தத் திருவிழா காலை 6.15 மணிக்கு வசந்த மண்டபப் பூஜையுடன் ஆரம்பமாகும். மாலை 5.30 மணிக்குக் கொடியிறக்கம் நடைபெறும்.

நாளைமறுதினம் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்குப் பூங்காவனத் திருவிழா நடைபெறும். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X