Niroshini / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், என்.ராஜ்,எஸ்.நிதர்ஷன்
நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பத்மநாதன் மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு, வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில், இன்று (30) நடைபெற்றது.
இதன்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் குமாரசாமி மதுசூதனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் பத்மநாதன் மயூரனும் முன்மொழியப்பட்டு, பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது, குமாரசாமி மதுசூதனன் 08 வாக்குகளையும் பத்மநாதன் மயூரன் 10 வாக்குகளையும் பெற்றதன் அடிப்படையில், புதிய தவிசாளராக பத்மநாதன் மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
16 minute ago
16 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
16 minute ago
55 minute ago
1 hours ago