Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இனங்களிடையேயான நல்லிணக்கம் நோக்கிய இலங்கையின் முயற்சிகளுக்கு கொழும்பிலிலுள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்க அரசாங்கம் ஆகியவற்றின் ஆதரவு உண்டென்பதை, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெஷாப் தெரிவித்துள்ளார்.
கண்டி மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துதெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேரர்களுடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய போது இலங்கையின் கலாசாரம், பௌத்தம் பற்றி கூடுதலாக அறிந்து கொண்டதாக அமெரிக்க தூதுவர் கூறினார். பௌத்த சமய அறிஞர்களுடன் நெருக்கமான உறவை வைத்திருக்க விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நல்லிணக்கம், ஒற்றுமைப்பட்ட ஜனநாயக, செழிப்பான, சுதந்திரமான சகலருக்குமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு, அமெரிக்கத் தூதரகமும், அமெரிக்காவும் உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்க தூதுவர் கூறினார்.
'கண்டியில் எனது உத்தியோகபூர்வ பயணத்தை தொடங்கியதையடுத்து தான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் இலங்கை முழுவதையும் சுற்றிப் பார்க்க விருப்பமாக உள்ளேன்' என அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
27 minute ago
17 May 2025