J.A. George / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146ஆக அதிகரித்துள்ளது,
கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 66 வயதான பெண் மற்றும் வெலிகம பகுதியைச் சேர்ந்த 54 வயதான பெண் ஆகியோர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொற்று உறுதியாகிய நிலையில், ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண், சிகிச்சை பலனின்றி இன்று (10) உயிரிழந்துள்ளார்.
அத்துடன், வெலிகம பகுதியைச் சேர்ந்த பெண், டுபாயிலிருந்து வருகைத் தந்து தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து ஹோமாகம வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட குறித்த பெண், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
14 minute ago
26 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
26 minute ago
52 minute ago