Niroshini / 2021 மே 13 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கான தனிமைப்படுத்தல் காலத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள சுகாதார அமைச்சு, வெளிநாடுகளிலிருந்து வரும் சகலரும், 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம், நாட்டில் தற்போது நிலவும் கொரோனா நிலைமையைக் கருத்திற்கொண்டு, இம்மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில், வெளிநாடுகளிலிருந்து வரும் சகலருக்குமான தனிமைப்படுத்தல் காலம் மாற்றப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில், வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர்கள், வெளிநாட்டவர்கள், இராஜதந்திரிகள் அனைவரும், 14 நாட்கள் தனிமைப்படுத்தலைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நாட்டுக்குள் வருவோர், கொரோனா தொற்றாளரொருவருடன் நெருங்கிப் பழகியவர் என்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலம் மேலும் நீடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், வெளிநாடுகளிலிருந்து வரும் 2 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்குப் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட மாட்டாதெனவும், சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
31 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago