R.Maheshwary / 2021 ஏப்ரல் 18 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
துறைமுக நகரம் தொடர்பில், நாட்டில் பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்த சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, கட்சி என்ற ரீதியில் நாட்டுக்கு சார்பான தீர்மானத்தை எடுப்போம் என தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எவ்வித கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேப்போல் கொழும்பு துறைமுக நகருக்குள் தனியான பொலிஸ், இராணுவப் பிரிவு அமைக்கப்படுவதாக எதிர்கட்சி குற்றஞ்சுமத்துவதாகத் தெரிவித்த அவர், அவ்வாறானதொரு நிலை ஏற்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடமளிக்காது என்றார்.
எமது ஜனாதிபதி அவ்வாறானதொரு நிலைமைய உருவாக்குவார் என தாம் நம்பவில்லை என்றும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நாட்டை முன்னேற்றுவதற்கான தேவையே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .