2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நாட்டைத் திறந்ததும் ரயில்கள் இயங்கும்

Freelancer   / 2021 செப்டெம்பர் 25 , பி.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு திறக்கப்படும் விதத்துக்கு அமைய ரயில்களை இயக்கத் தயாராக இருப்பதாகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுவதற்கு முன்னர், ரயில்கள் சில சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்றும் ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் ரயில்களை இயக்குவற்கான கால அட்டவணை ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டு மாகாணங்களிடையேயான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் அமுல்படுத்தப்படுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அட்டவணை எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது தெளிவாக இல்லை என்றும் அவர் கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X