2025 ஜூலை 14, திங்கட்கிழமை

நாமலின் அடுத்த வியூகம்

S.Renuka   / 2025 மே 25 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவை எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ, அழைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய தேர்தல்களில், தஹாம் சிறிசேன பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பணியாற்ற அழைக்கப்பட்டிருந்தார். 

எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை வலுவான முறையில் மேற்கொள்வதே இதன் நோக்கம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த முன்மொழிவை தஹாம் சிறிசேன இன்னும் ஒப்புதல் அல்லது மறுப்பு குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை எனவும் கூறப்படுகின்றது.

மேலும் எதிர்காலத்தில் அவர் இது குறித்து ஒரு முடிவை எடுப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், சமீபத்தில் பத்தரமுல்லையில் உள்ள போர்வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு முன்னால் நடைபெற்ற போர்வீரர்கள் அஞ்சலி நிகழ்வில் நாமலும் தஹாமும் ஒன்றாக அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .