Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Renuka / 2025 ஏப்ரல் 03 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது சட்டத்தரணிக்கான தகுதியை மோசடியாகப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இன்று வியாழக்கிழமை (03) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான குடிமக்கள் சக்தி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டது.
இலங்கை சட்டக் கல்லூரி தேர்வுகளின் போது ராஜபக்ஷ மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டாரா? என்பது குறித்து விசாரணை கவனம் செலுத்துவதாக சிஐடியின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தக் கூற்றுகளைச் சரிபார்க்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, புலனாய்வாளர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பதிவுகளை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.
சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி, விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
23 minute ago
34 minute ago
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
34 minute ago
38 minute ago
1 hours ago