Kogilavani / 2017 ஜூன் 23 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளிலும் கடமை நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்படும் நாய்கள் தொடர்பிலான தகவலை வழங்கமுடியாது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (22) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான புத்திக பத்திரண கேட்டிருந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முப்படைகளி லும் உள்ள நாய்களின் எண்ணிக்கை, அவற்றைப் பராமரிப்பதற்கு செலவிடப்படும் பணத்தொகை, நாய்களிலிருந்து பெறப்படும் பயன்கள் உள்ளிட்டவற்றைக் கேட்டிருந்தார்.
அக்கேள்விக்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, முப்படைகளிலும் இருக்கின்ற நாய்கள், தேசிய பாதுகாப்புக்காகவே பயன்படுத்தப்படுகின்றது. ஆகையினால், தேசியப் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, அந்த நாய்களின் எண்ணிக்கையைக் கூறமுடியாது என்றார்.
இதேவேளை, தரைப்படையில் பொறியியல் படையணியில் உள்ள நாயொன்றைப் பராமரிப்பதற்கு மாதாந்தம் 15,476 ரூபாயும், கொமாண்டோ படையணியில் உள்ள நாயொன்றைப் பராமரிப்பதற்கு 11,037 ரூபாயும் செலவிடப்படுகின்றது.
கடற்படையில் உள்ள நாயொன்றைப் பராமரிப்பதற்கு மாதாந்தம் 28,685 ரூபாயும், விமானப்படையில் உள்ள நாயொன்றைப் பராமரிப்பதற்கு 7,962 ரூபாயும் செலவிடப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்தப் படைகளுக்காக வெளிநாடுகளிலிருந்து மேலும் நாய்களை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் அவர் பதிலளித்தார்.
4 minute ago
24 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
24 minute ago
29 minute ago