Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 12 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீட்டில் செல்லப்பிராணிகளாக நாய்களை வளர்ப்பவர்களும் தெரு நாய்கள் அதிகமாகக் கொண்டப் பிரதேசங்களில் வசிப்போரும், மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என, பேராதனை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நாய்களிடமிருந்து பரவக்கூடிய ஒரு வகையான நோய் காரணமாகவே, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நோய், இதற்கு முன்னர், தென்னாபிரிக்காவில் இனங்காணப்பட்டது என்றும் தற்போது இலங்கையில் இது இனங்காணப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பேராதனை கால்நடை வைத்தியசாலையில், அண்மையில் நோய்வாய்ப்பட்ட நாயொன்று அனுமதிக்கப்பட்டது என்றும் அந்நாயைச் சோதனைக்குட்படுத்திய போது, ட்ரிபனசோமா ( (Trypanosoma) என்ற நோய் ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதாகவும் பேராசிரியர் தங்கொல்ல தெரிவித்துள்ளார்.
நாய்க்கு ஏற்படும் இந்நோய் மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன என்றும் எனவே, மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
42 minute ago
59 minute ago
1 hours ago