Niroshini / 2021 மே 07 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடும் முழு உலகமும், கொரோனா வைரஸ் தொற்றிருந்து விடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சகல வணக்கஸ்தலங்களிலும் நாளை (08) மாலை 5.46 மணிக்கு விசேட வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.
இதற்கமைவாக, கோவில்களில் விசேடமாக, பஞ்ச ஈஸ்வரங்களில், மஹா மிருத்யுஞ்சய ஹோமம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் எண்ணக்கருவுக்கமைய மேற்கொள்ளப்படவுள்ள இப்பூஜை வேளையில், பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலில் இருந்தவாறே பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபட வேண்டுமென்றும் இலங்கையை விட்டும உலகத்தை விட்டும் கொரோனா நீங்க வேண்டும்மென்றும் பிரார்த்தனை செய்துகொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் சுகமடைய வேண்டும், சகலரும் வளமான வாழ்க்கையப் பெறவேண்டும் என்று இறைவனை மனதார ஒருமித்துப் பிரார்த்திக்குமாறு, சமய கிரியைகள், புத்தசாசன மத விவகார அமைச்சின் இந்து சமய விவகார இணைப்பாளரும் சர்வமத இந்து பீட செயலாளருமான கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago