Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 செப்டெம்பர் 19 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்றில் பொதுமக்கள் கலரி நாளை (20) முதல் திறக்கப்படவுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 நிலைமை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இதுவரை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பில் படைக்கல சேவிதரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவினால் கடந்த 14ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதற்கமைய முதற்கட்டமாக பாராளுமன்ற அமர்வு தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் பாடசாலை மாணவர்களுக்கும், பாராளுமன்றத்தை பார்வையிட விரும்பும் தரப்பினருக்கும் அனுமதியை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
நாளையதினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 3 மணிவரை பாடசாலை மாணவர்கள் பாராளுமன்றக் கட்டடத்தொகுதிக்கு வருகைதர முடியும்.
பாராளுமன்றுக்கு பிரவேசிப்பதற்கான விண்ணப்பங்களை http://www.parliament.lk என்ற இணையத்தளத்துக்கு பிரவேசிப்பதன் மூலமும், 011 2777 473, 011 2777 335 என்ற தொலைநகல் இலக்கங்கள் ஊடாகவும் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.(R)
52 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
3 hours ago