Editorial / 2019 ஜூலை 29 , பி.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு அரசதுறையில் நியமனம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், 16800 பேருக்கு நியமனம் வழங்கும் நடவடிக்கை நாளை (30) மதியம் 12 மணிக்கு அலரி மாளிகையில் ஆரம்பமாகவுள்ளது.
இதன்போது, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கும், களுத்துறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 200 பட்டதாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமனம் வழங்கவுள்ளார்.
இதனை பிரதமர் அலுவலகம் இன்று அறிவித்துள்ளதுடன், கொழும்பை சேர்ந்த 1840 பட்டதாரிகளுக்கும் கம்பஹாவை சேர்ந்த 1760 பட்டதாரிகளுக்கும் களுத்துறையை சேர்ந்த 200 பேருக்கும் நியமன கடிதங்கள் வழங்கிவைக்கப்படும்.
அத்துடன், ஏனைய 22 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாவட்டத்துக்கு 40 பேர் என்ற அடிப்படையில் 880 பட்டதாரிகளுக்கும், வெளிவாரி பட்டதாரிகள் 880 பேருக்கும் நாளைய தினம் அலரிமாளிகையில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
12 minute ago
32 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
32 minute ago
39 minute ago
2 hours ago