Editorial / 2026 ஜனவரி 15 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்
யாழ்ப்பாணம் - மன்னார் ஏ- 35 வீதி, தென்மராட்சி நாவற்குழி பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி மதிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் வியாழக்கிழமை (15 )அதிகாலை 5.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் ஒன்றே கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் கிளிநொச்சி வட்டக்கச்சியை சேர்ந்த இளைஞர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.
ஒருவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும், மற்றவரது சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
2 hours ago
8 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
16 Jan 2026