Editorial / 2020 டிசெம்பர் 24 , மு.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்கும், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவிடமிருந்து முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்காது எனத் தெரிவித்த ரவூப் ஹக்கீம் எம்.பி,
மேற்படி குழுவை முதலில் மாற்றம் செய்தால் மாத்திரமே, முஸ்லிம்களுக்கு நியாயமான தீர்வொன்று கிடைக்கும் என்றார்.
பொரளை, கனத்தை மயானத்துக்கு முன்பாக நேற்று (23) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு, அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,
இந்நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்யுமாறு விடுக்கப்படும் கோரிக்கையை, தற்போதைய அரசாங்கம் இனவாத நோக்கங்களுக்காகப் புறக்கணித்து வருவதாகவும் சாடினார்.
இது தொடர்பாக ஆராய, அரசாங்கம் நியமித்துள்ள நிபுணர்கள் குழுவிடமிருந்து, முஸ்லிம்களுக்கு ஒருபோதும் நியாயம் கிடைக்காதெனத் தெரிவித்த அவர், முஸ்லிம்கள் அமைதி வழியில் முன்னெடுக்கும் வெள்ளைத் துணிகளைக் கட்டிவைக்கும் செயற்பாட்டையும் அரசாங்கம் முடக்குகிறது என்றார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago