Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் அவரது மனைவி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த திங்கட்கிழமை (18) மாலை அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் இயங்கி வந்த கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில், கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதியும் இதற்கு உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
வழக்கு ஒன்றுக்காக தன்னிடம் 2300 ரூபாய் பணம் இலஞ்சமாக கேட்பதாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய மாறுவேடத்தில் மருதமுனை பகுதியில் இயங்கி வந்த குவாஷி நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் அருகில் மாறு வேடத்தில் காத்திருந்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு அதிகாரிகள் நீதிபதி மற்றும் மனைவியை கைது செய்தனர்.
சந்தேக நபர்கள் 2300 ரூபாவினை இலஞ்சமாக பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்ததுடன் சந்தேக நபர்கள் புதன்கிழமை(19) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இதன்போது கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் அவரது மனைவியை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.
பாறுக் ஷிஹான்
10 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
2 hours ago