Editorial / 2019 ஜூலை 16 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடல் அலைகளின் தாக்கம் அதிகரித்து செல்லும் நிலை காணப்படுவதால் தென் கடற்பகுதிகளில் நீராடச் செல்லும்போது அவதானமாக செயற்படுமாறு கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை அறிவுத்தல் விடுத்துள்ளது.
விசேடமாக இந்த நாட்களில் காலை மற்றும் பிற்பகல் நேரங்களில் இந்த நிலை காணக்கூடியதாக உள்ளதாக அந்த அதிகார சபையின் பொது முகாமையாளர் பேராசிரியர் டர்னி பிரதீப் குமார் கூறியுள்ளார்.
இதேவேளை, அம்பலங்கொட, கொடகம், தெல்வத்த ஆகிய பிரதேசங்களில் அதிக அலை காரணமாக கடல் நீர் வீதிகளில் புகுந்தமை காரணமாக காலி - கொழும்பு பிரதான வீதியில் கல், மண் நிறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், வருடாந்தம் குறித்த பகுதியில் இவ்வாறு கடல் நீர் உட்புகுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago