Freelancer / 2022 பெப்ரவரி 12 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கேனில்வேர்த் தோட்ட நீர்தேக்கத்திலிருந்து இன்று காலை 9 மணியளவில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கேனில்வேர்த் தோட்டம், இலக்கம் 3 பிரிவைச் சேர்ந்த இராசலிங்கம் (வயது 62) மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இரவு 8 மணியளவில் தனது மகனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் நீர்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்துக்குச் சென்ற உறவினர்கள் நீர்த்தேக்கத்தில் குதித்தவரை இரவு முழுவதும் தேடியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 minute ago
11 minute ago
12 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
12 minute ago
13 minute ago