2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘நீர் விநியோகம் தடைப்படும்’

Editorial   / 2018 டிசெம்பர் 13 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரவெவ நீர் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவிருக்கும் திருத்தப் பணிகளின் காரணமாக, இன்று (13) இரவு 7 மணி தொடக்கம் 24 மணித்தியாலத்துக்கு சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென தேசிய நீ​ர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்​பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி அனுராதபுரம், விஜயபுர, யாழ் சந்தி, குருந்தன்குளம் மற்றும் ரம்பேவ ஆகிய பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளின் காரணமாக, நாளை மறுதினம் (15) நள்ளிரவு 12 மணிமுதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 6 மணி வரை மேலும் சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மொரகஸ்முல்ல, ராஜகிரிய, எத்துல்கோட்டை, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரியவிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையிலான பிரதான வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .