Editorial / 2026 ஜனவரி 07 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்
காத்தான்குடி கடல் புதன்கிழமை (07) காலை முதல் வித்தியாசமாக வெள்ளை நிற நுரையைத் தள்ளி வருவதை அவதானிக்க முடிகிறது
அண்மையில் வடக்கில் இவ்வாறான நுரையை பாரிய அளவில் கடல் அலைகள் தள்ளி வந்ததை போல இப்போது காத்தான்குடி கடலில் நுரை அலைகளோடு வெளியேறி வருகிறது
சாதாரணமாக அலைகள் கரைக்கு வந்து செல்வது வழமை.ஆனால் தற்போது வருகின்ற அலைகளோடு இவ்வாறு பாரியளவில் நுரைகள் தள்ளப்பட்டு கரையிலிருந்து அவைகள் காற்றினூடாக பறப்பதையும், அதிகளவிலான நுரைகள் கரையோரத்தில் தேங்கி இருப்பதையும் காணமுடிகின்றது.
பஞ்சு போன்ற மென்மையான குறித்த நுரைகளை சிறுவர்கள் கையில் எடுத்து விளையாடுவதுடன் காற்றினூடாக குறித்த நுரைகள் மேல்நோக்கி பறப்பதையும் அவதானிக்க முடிகின்றது
இது தொடர்பாக மீனவர்களிடம் கேட்டபோது இவ்வாறு அலைகளோடு நுரைகள் வருவதில்லை. இதை வரலாற்றில் முதல் தடவையாக வருகிறது நாம் அறிந்தவரை பல நூறு வருடங்களுக்கு முன்பு இவ்வாறு நுரை தள்ளியதாக அனுபவசாலிகள் சொல்லியதை நாம் கேட்டிருக்கிறோம் என தெரிவிக்கின்றனர்.






4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago