Freelancer / 2025 ஒக்டோபர் 31 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கணேமுல்ல சஞ்சீவ கொலையில் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி, இதற்கு முன்னர் கெஹெல்பத்தர பத்மே தொடர்பான வழக்குகளிலும் ஆஜராகி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கெஹெல்பத்தர பத்மே இந்தச் சந்தேகநபரான சட்டத்தரணிக்கு லட்சக்கணக்கான பணத்தை கொடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இதனடிப்படையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த சட்டத்தரணியின் வங்கி கணக்குகள் மற்றும் அவரது தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் குறித்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
சந்தேகநபரான சட்டத்தரணி கடந்த ஜூன் மாதம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சிங்கப்பூர் வழியாக துபாய் சென்று திரும்பியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் அவ்வப்போது வாடகைக்கு வீடுகளைப் பெற்று தனது வசிப்பிடத்தை மாற்றிக்கொண்டே வந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றன. R
56 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago