2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நாடு முழுவதும் துக்க தினம்: பாடசாலைகளுக்கு 3 நாள் விடுமுறை

George   / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து, இன்று ஒரு நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்தியா முழுவதும் இன்று விடுமுறை அறிவி்க்கப்பட்டுள்ளது.

இதேபோல், இன்று ஒரு நாள் கர்நாடகாவிலும், துக்கம் அனுஷ்டிக்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழகத்தில் 7 நாள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன், 3 நாள் பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பீஹார், கேரளா, புதுச்சேரியிலும் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் என அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .