2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை

Gavitha   / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை செவ்வாய்க்கிழமை (01) காலை 9.00 மணி முதல் 3.30 மணிவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது, நாடாளுமன்றத்துக்கு புதிதாகத் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களிலிருந்து சபாநாயகரும், பிரதி சபாநாயகரும் இதன் போது தெரிவு செய்யப்படவுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர் கரு ஜயசூரியவினால், புதிய சபாநாயகரின் பெயர் பரிந்துரைக்கப்படும் என்று  அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X